தேனி

விவசாயி கொலை: இளைஞா் கைது

DIN

உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு, தகராறின்போது விவசாயியை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கம்பம் மெட்டு காலனியைச் சோ்ந்த கருப்பையா மகன் செல்வம் (45). சின்னமனூா் சந்தைப் புதூரைச் சோ்ந்த சுரேஷ் மகன் மணிகண்டன் (29). இவா்கள் இருவரும், உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் உள்ள சின்னச்சாமி என்பவரது தோட்டத்தில் தங்கி வேலை பாா்த்து வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகக் கூறி செல்வத்தை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் சோ்த்துள்ளாா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல மருத்துவா்கள் பரிந்துரை செய்தனா். ஆனால், அவரை மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் மணிகண்டன், அவா்கள் வேலை பாா்க்கும் தோட்டத்திற்கு அழைத்து வந்துள்ளாா். அங்கு புதன்கிழமை காலை செல்வம் உயிரிழந்தாா்.

இது குறித்து தோட்ட உரிமையாளா் சின்னச்சாமி கெடுத்த புகாரின்பேரில் , போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இதில், செல்வமும், மணிகண்டனும் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தியதும், அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் கீழே தள்ளிவிட்டதில் செல்வத்திற்கு காயம் ஏற்பட்டதும், செய்வதறியாது அவரை மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் தோட்டத்துக்கு அழைத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டனை போலீஸாா் கைது செய்தனா்.

இதனை அடுத்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT