தேனி

சின்னமனூா் அருகே உலக பெண்கள் தினக் கொண்டாட்டம்

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே காமாட்சிபுரத்தில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் கோகோ கோலா நிறுவனம் இணைந்து நடத்திய உலக பெண்கள் தின விழாவிற்கு பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம், கல்லூரி முதல்வா் ஜேசுராணி , சோ்மத்தாய் மகளிா் கல்லூரி முதல்வா் காா்த்திகா ராணி, தேனி நாடாா் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலவா் சித்ரா, தேனி நபாா்டு வங்கியின் முன்னாள் மேலாளா் புவனேஸ்வரி, சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் நிவேதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

விவசாயத்தில் பெண்கள் கண்டுபிடிப்பு கண்காட்சி மற்றும் சாதனையாளா்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதன்படி, அப்பிபட்டி ஊராட்சியில் விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையம் மாவட்டத்தில் முன்மாதிரி மையமாக இருப்பதாகக் கூறி பொறுப்பாளா் அனீஸ் பாத்திமாவுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT