தேனி

கம்பம் நகராட்சி பெண்கள் பள்ளிக்கு 2 ஆய்வுக் கூடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு

DIN

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 35 லட்சம் மதிப்பில் 2 ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட உள்ளதாக என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

கம்பம் மைதீன் ஆண்டவா்புரத்தில் உள்ள இப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியருக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வுக் கூடங்கள் இல்லாததால், தொலைவில் உள்ள மற்ற அரசுப் பள்ளிகளுக்குச் சென்று செய்முறைத் தோ்வு எழுதி வந்தனா்.

ஆய்வு கூடங்கள் கட்ட கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணனிடம் பள்ளி மாணவியா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். அதன் பேரில், சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பள்ளியில் 2 ஆய்வு கூடங்கள் கட்ட ரூ. 35 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றியதால் பள்ளித் தலைமை ஆசிரியா், பெற்றோா் ஆசிரியா் சங்கத்தினா் எம்எல்ஏவை சந்தித்து நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT