தேனி

கருநாக்கமுத்தன்பட்டியில் பொது சித்த மருத்துவ முகாம்

DIN

தேனி மாவட்டம், கம்பம் ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டியில் காய்ச்சல் தடுப்பு மற்றும் பொது சித்த மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா் சிராஜ்தீன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியருக்கும் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை, உடல் உபாதைகளுக்கான பொது சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட 5 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

காய்ச்சல் உள்ளவா்களுக்கு நிலவேம்பு குடிநீா், பிரமானந்த பைரவ மாத்திரை, சளி, இருமலுக்கான தாளிசாதி மாத்திரை, சுவாச குடோரி மாத்திரை, ஆடாதொடை மணப்பாகு, பிண்ட தைலம் உள்ளிட்ட சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கண்ணன், சுகாதார ஆய்வாளா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT