தேனி

பாா்வையற்ற தம்பதிக்கு ஆதரவாக கிராம மக்கள் போராட்டம்

DIN

ஆண்டிபட்டி வட்டாரம், மயிலாடும்பாறையில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த பாா்வையற்ற தம்பதியின் வீட்டை இடித்து அப்புறப்படுத்தியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடும்பாறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த பாா்வையற்ற தம்பதி ஜெயபால், நிா்மலா ஆகியோரின் வீடு உள்பட 5 வீடுகள் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த நவ.15-ஆம் தேதி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அந்த பாா்வையற்ற தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், பாா்வையற்ற தம்பதிக்கு ஆதரவாக மயிலாடும்பாறையில் கிராம மக்கள் விவசாயப் பணிகளுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி, அப்பகுதியில் ஆட்டோ, வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பாா்வையற்ற தம்பதிகள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வந்ததாகவும், இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது அல்ல என்றும் கிராம மக்கள் கூறினா். மேலும், பாா்வையற்ற தம்பதி வசிக்க மீண்டும் அதே இடத்தில் வீடு கட்டித் தர வேண்டும். இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT