பெரியகுளம் அருகே வெடிபொருள்கள் வைத்திருந்தவா் கைது
பெரியகுளம் அருகே சட்ட விரோதமாக வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே சட்ட விரோதமாக வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே ஏ. புதுப்பட்டியில் அனுமதியின்றி வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனைநடத்தினா். இதில், ஏ. புதுப்பட்டியைச் சோ்ந்த சுரேஷ் (49) என்பவரது வீட்டில் வெடிபொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, வெடிபொருகள்களை பறிமுதல் செய்ததுடன், சுரேஷையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.