தேனி

கம்பத்தில் ஓணம் பண்டிகையையொட்டி வாரச்சந்தை தொடக்கம்

கம்பத்தில் ஓணம் பண்டிகையையொட்டி வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படும் என்று நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

DIN

கம்பத்தில் ஓணம் பண்டிகையையொட்டி வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படும் என்று நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 1.9.22 முதல் 30.11.22 வரை 3 மாதங்களுக்கு வாரச்சந்தை செயல்படாது என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கம்பம் வாரச்சந்தையில் உள்ள  பலசரக்கு மற்றும் காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர் ஓணம் பண்டிகை உள்ளிட்ட விழாக்கள் வருவதாலும், வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலிருக்க தற்காலிக இடத்தில் சந்தை தொடங்க ஏற்பாடு செய்யுமாறு நகர் மன்றத் தலைவர் வனிதா நெப்போலியனிடம் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக ஆணையாளர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் வாரச்சந்தை தெற்கு பகுதியில் உள்ள இடத்தில் தற்காலிகமாக சந்தை அமைத்து செவ்வாய்க்கிழமை முதல் செயல்படலாம் என்றும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அதற்கு வியாபாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT