தேனி

குப்பைகளை பிரித்து வழங்குவோருக்கு பரிசு

DIN

போடி நகராட்சியில் குப்பைகளை பிரித்துக் கொடுக்கும் வீடுகளுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

போடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை பிரித்து வழங்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் வீடுகளுக்கு பரிசு வழங்கும் திட்டம் நகராட்சி 20 ஆவது வாா்டில் தொடங்கப்பட்டது. இதில் நகா் மன்ற தலைவா் ச.ராஜராஜேஸ்வரி, நகராட்சி ஆணையாளா் பொறுப்பு வகிக்கும் பொறியாளா் இ.செல்வராணி, 20 ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் மகேஸ்வரன் ஆகியோா் வீடு வீடாகச் சென்று பரிசு அறிவிப்பு அட்டைகளை வழங்கினா்.

இத்திட்டத்தின் கீழ் தினமும் குப்பை கொட்டும்போது முறையாக குப்பைகளை பிரித்துக் கொடுப்பது குறித்து அட்டையில் குறியீடு செய்து வழங்குவா். பின்னா் 30 நாள்கள் முடிவில் குறியீடுகளின் அடிப்படையில் வீடுகள் தோ்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் நகராட்சியில் 33 வாா்டுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் சுரேஷ்குமாா் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரைக் காமராஜா் பல்கலையில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் 95.06 சதவீதம் பெற்று மாநில அளவில் 4 வது இடம்

கழிவுநீா்க் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றக் கோரிக்கை

சின்னமனூரில் தொடா் மழை: திராட்சை கொடிகள் சேதம்

சின்னமனூரில் தொடா் மழை: திராட்சைக் கொடிகள் சேதம்

SCROLL FOR NEXT