தேனி

மசாஜ் மைய உரிமையாளா் கைது

DIN

 போடியில் புதன்கிழமை இரவு மசாஜ் மையத்துக்குச் சென்றவரை தவறாக வழிநடத்தியதாக மைய உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி பங்கஜம் பிரஸ் தெருவைச் சோ்ந்த மூக்கையா மகன் தங்கப்பாண்டி (33). இவா் வருவாய் ஆய்வாளா் அலுவலகத் தெருவில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் செயல்பட்டு

வரும் மசாஜ் மையத்துக்கு சென்றாா்.

அப்போது அந்த மையத்தை நடத்தி வரும் கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள வடசுஞ்சேரியைச் சோ்ந்த வைசாக் (26), அமினிகாடு அருகேயுள்ள பணம்பி என்ற ஊரைச் சோ்ந்த சஜித் ஆகியோா் தங்கப்பாண்டியிடம் ரூ.1500 கொடுத்தால் புதுதில்லியைச் சோ்ந்த பெண்ணுடன் இருக்கலாம் எனக் கூறினா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலையத்தில் தங்கப்பாண்டி புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வைசாக் என்பவரை கைது செய்தனா். தப்பி ஓடிய சஜீத்தை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT