பிரபுதேவா. 
தேனி

முல்லைப்பெரியாற்றில் குதித்த இளைஞர் சடலமாக 3-வது நாளில் மீட்பு

கம்பம் அருகே குற்றவாளியைப் பிடிக்க முல்லைப்பெரியாற்றில் குதித்த இளைஞர் பிரபுதேவா சடலமாக 3 நாளான திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

DIN

தேனி மாவட்டம், கம்பம் அருகே குற்றவாளியைப் பிடிக்க முல்லைப்பெரியாற்றில் குதித்த இளைஞர் பிரபுதேவா சடலமாக 3 நாளான திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் விஜயகுமாரை பிடிக்க சனிக்கிழமை கண்ணன் என்ற காவலருடன் சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த சென்ற இளைஞர்கள், குற்றவாளி ஆற்றில் குதிப்பதை பார்த்து நால்வரும் குதித்தனர். இதில் மூன்று பேர் கரையேற, உடன் குதித்த பிரபுதேவாவை காணவில்லை. 

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் தீயணைப்பு மீட்பு படையினருடன் காவல்துறையினரும் தேடினர்.  மூன்றாவது நாளான திங்கள்கிழமை காலையில் சுருளிப்பட்டி அருகே உள்ள கூட்டாறு பிரிவில் பிரபுதேவா சடலம் மரக்கிளையில் சிக்கியிருந்ததை பார்த்த தீயணைப்பு படையினர் சடலத்ததை மீட்டனர். 

பின்னர் உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக கம்பம் தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சிவப்பு எனக்குப் பிடிக்கும்... நேகா சர்மா!

அக்டோபர் சீசன்... நிம்ரத் கௌர்!

பழுப்பு என்பது நிறமல்ல... நிவிஷா!

குட்டி செல்லத்தின் சேட்டைகள்! Keerthy Suresh இன்ஸ்டா பதிவு!

SCROLL FOR NEXT