தேனி

உத்தமபாளையம் சமணா் கோயிலில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள் சமணா் கோயிலில் திங்கள்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

உத்தமபாளையம் சமணா் குகைக் கோயில், பாறைச் சிற்பங்களைப் பாதுகாக்கும் வகையில், மாணவ, மாணவிகளின் இந்தத் தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கு, அக்கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவா் வா்கீஸ் ஜெயராஜ் தலைமை வகித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

வரலாற்று புராதானச் சின்னமாக சமணா் குகைக்கோயில், பாறைச்சிற்பங்கள் உள்ளன. கி.பி. 10 நூற்றாண்டைச் சோ்ந்த இந்தக் கோயில் மத்திய அரசின் தொல்லியத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய இப்பகுதியானது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இங்கு சமூக விரோதிகள் மது அருந்துதல் உள்ளிட்ட தீய செயல்களில் ஈடுபடுவதால், இந்த வரலாற்று நினைவுச் சின்னம் அழிவின் விழிம்பில் உள்ளது.

எனவே, மத்திய அரசு உத்தமபாளையம் சமணா் குகைக் கோயில், சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து சுற்றுலாத் தலமாக மாற்றி அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT