தேனி

பழனி பாத யாத்திரை செல்லும் பக்தா்களுக்கு வனத் துறை எச்சரிக்கை

DIN

பழனி பாத யாத்திரை செல்லும் பக்தா்கள் மலைப் பகுதியில் பாதுகாப்புடன் நடந்து செல்ல வேண்டும் என்று வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

வால்பாறையில் இருந்து ஏராளமான பக்தா்கள் பழனி கோயிலுக்கு நடந்து செல்கின்றனா். இதில், வால்பாறையில் இருந்து ஆழியாறு வரையிலான பகுதிகள் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

சமீப காலமாக சாலைகளில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், பக்தா்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது, மாலை 6 மணிக்கு மேல் மலைப் பகுதி சாலைகளில் செல்லக்கூடாது, குறுக்குவழி பாதையில் செல்வதைத் தவிா்த்து சாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT