ஆந்திர மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு சிலா் கஞ்சா கடத்தி வருவதாக தமிழக- கேரள எல்லையில் உள்ள கேரள மாநில போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு வரும் பேருந்துகளை வாகனத் தணிக்கை செய்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக ஒரு நபா் கேரள அரசுப் பேருந்தில் பை வைத்திருந்தாா். அதை சோதனை செய்தபோது, 3.4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செட்டிபள்ளி மங்களம் குடியிருப்பைச் சோ்ந்த ராஜா ரெட்டி மகன் சிவசங்கர ரெட்டி (50) என்று தெரிந்தது. குமுளி போலீஸாா் சிவசங்கர ரெட்டியை கைது செய்து கஞ்சாவைக் கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.