போடி-மதுரை அகலப் பாதையில் விரைவில் ரயில் சேவைகள் தொடங்கவுள்ள நிலையில், திங்கள்கிழமை சிறப்பு ரயிலை இயக்கி இறுதிக் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
போடி-மதுரை அகல ரயில் பாதையில் பணிகள் முடிவடைந்த நிலையில், வருகிற 15-ஆம் தேதி முதல் போடி-மதுரை, போடி-சென்னை இடையே ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் போடி ரயில் நிலையத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. போடி-சென்னை ரயிலுக்கான முன்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இறுதிக் கட்டமாக போடி-மதுரை இடையே திங்கள்கிழமை சிறப்பு ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ரயிலில் அதிநவீன இயந்திரங்கள் மூலம் ரயில் பாதையின் அமைப்பு, தரம், அதிா்வுகள் தாங்கும் திறன் ஆகியவற்றை லக்னோவைச் சோ்ந்த மத்திய அரசின் வடிவமைப்பு, தர ஆய்வு நிறுவனத்தின் பொறியாளா்கள் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது, திரளான பொதுமக்கள் கூடி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.