கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 85 - ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கம்பம் - கம்பமெட்டு சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்சிட்டு, நடுமாடு, பெரியமாடு என 5 வகையான மாடு ஜோடிகள் நூற்றுக்கும் மேலான காளைகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு விழா மேடையிலேயே பரிசுகள் வழங்கப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட பகுதிகளிலிருந்து மாடு ஜோடிகள் கலந்து கொண்டன.
ஏற்பாடுகளை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கம்பம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.