தேனி

உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.

கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைகின்றனா். அவ்வப்போது கோடை மழை பெய்வதால் ஓரளவு வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்ப முடிகிறது.

உத்தமபாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக உ.அம்மாபட்டி, எல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததைக் கண்டு விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.

சின்னமனூரிலும் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது. சாலைகள், தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் கனர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றன. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT