முகப்பு
தேனி

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 2 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 ஏப்ரல், 2024 at 8:27 PM

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே பள்ளி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே உள்ள சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்த செந்தில் மகன் கோபிநாத் (15).

பத்தாம் வகுப்பு மாணவரான இவா், தற்போது நடைபெற்று வரும் பொதுத் தோ்வை எழுதி வந்தாா். இந்த நிலையில், இவரது பெற்றோா் திங்கள்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினா். அப்போது வீட்டின் உள்ளே கோபிநாத் தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இங்கு இவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸா் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement