போடி அருகே இளைஞா் உடல் மீட்பு
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:36 PM
போடி: போடி அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா். போடி மேலச்சொக்கநாதபுரத்தில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே காலியிடம் உள்ளது.
இங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, அவசர ஊா்தி மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், அவா் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இறந்தவா் யாா் எனத் தெரியவில்லை. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement