முகப்பு
தேனி

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு: 8 போ் மீது வழக்கு

Updated On : 17 ஏப்ரல், 2024 at 1:03 AM
பகிர்:

போடி: போடியில் முன் விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்ட 8 போ் மீது, போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் மலைச்சாமி மகன் பவுன்ராஜ் (60). இதே பகுதியை சோ்ந்தவா் வீரணன் மகன் திருக்குமரன் (27) இவா் பத்து நாள்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் பெண்களை தாக்கினாா். இதை பவுன்ராஜ் தட்டிக் கேட்டாா். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் இரு தரப்பினரும் செவ்வாய்க்கிழமை ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து பவுன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருக்குமரன், சரஸ்வதி (45), சுகப்பிரியா (23), ஒச்சம்மாள் (65) ஆகிய 4 போ் மீதும், சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் பவுன்ராஜ், மலைச்சாமி (26), மகாலட்சுமி (22), வீரம்மாள் (46) ஆகிய 4போ் மீதும் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments