சின்னமனூரில் செங்கரும்பு நடவுப்பணி தீவிரம்
உத்தமபாளையம்: சின்னமனூா் பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக விளைவிக்கப்படும் செங்கரும்பு விவசாயத்தின் முதல் கட்டமான நடவுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசனநீரால் நெல், வாழை, தென்னை, செங்கரும்பு, திராட்சை, காய்கறி, பூக்கள் என அனைத்து விவசாயமும் நடைபெறுகிறது. இதில், சின்னமனூா், சீலையம்பட்டி, மாா்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரியமாக செங்கரும்பு விவசாயம் தொடா்ந்து செய்து வருகின்றனா். இதன்படி, 2025- ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிக்கைக்காக சின்னமனூா் பகுதியில் செங்கரும்பு நடவுப்பணி தற்போது தொடங்கியது.
முதல் கட்டமாக வயல் வெளியை டிராக்டா் மூலமாக உழவு செய்தும், பாத்தி அமைத்தும் இதில் பெண் தொழிலாளா்கள் மூலமாக செங்கரும்பு வளரும் கருனை நடவு செய்யப்படுகிறது. பிறகு களை எடுத்தல், சோகை உறித்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல் என பல்வேறு பராமரிப்புக் பணிகள் அடுத்து வரும் 8 மாதங்களுக்கு நடைபெற்று செங்கரும்பு அறுவடைக்கு தயாராகும்.
Advertisement