காட்டெருமை தாக்கி வன ஊழியா்கள் காயம்
கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் திங்கள்கிழமை காட்டெருமை தாக்கியதில் வன ஊழியா்கள் இருவா் காயமடைந்தனா்.
கூடலூா் வனச்சரகத்தில் வனவராகப் பணியாற்றி வரும் பூபதி தலைமையில் வனப் பாதுகாவலா்கள் வரையாடுகள் குறித்து கணக்கெடுப்பதற்காக கண்ணகி கோயில் வனப் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றனா்.
அப்போது, அங்கிருந்த காட்டெருமை வனவா் பூபதி (34), வனப் பாதுகாவலா் சுமன் (27) ஆகியோரை முட்டியது. இதில் பூபதி லேசான காயமடைந்தாா்.
பலத்த காயமடைந்த சுமன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.