ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சொக்கா்.  
தேனி

பெண் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

ஆண்டிபட்டியை அடுத்த காந்திபுரத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Din

ஆண்டிபட்டியை அடுத்த வருஷநாடு அருகேயுள்ள காந்திபுரத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தேனி மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

காந்திபுரத்தைச் சோ்ந்த பெருமாள் மனைவி சமுத்திரம் (48). தனது கணவா் இறந்து விட்ட நிலையில், இவா் அதே ஊரில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வந்தாா். இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த ரத்தினம் மகன் சொக்கா் (35), இவரிடம் தவறாக நடத்த முயன்றாா். இதைக் கண்டித்த அவரைக் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தாா்.

இதுகுறித்து வருஷநாடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சொக்கரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி ஜி.அனுராதா, சொக்கருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

நவீன சீரியலின் முடிசூடா மன்னர் திருமுருகன்: வைரலாகும் விடியோ!

ஓடிடியில் ஆர்யன்: இந்த வார படங்கள்!

கூடைப்பந்து வீரர் உயிரிழப்புக்கு பாஜக அரசுதான் காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பும்ரா செய்தது மட்டும் நியாயமா? தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமா கேள்வி!

அரசியலமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாஜக-ஆர்எஸ்எஸ் பாசங்கு: கார்கே!

SCROLL FOR NEXT