முகப்பு
தேனி

தேனியில் இன்று எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.20) மாலை 4 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:03 PM
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.20) மாலை 4 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி தலைமையில் நடைபெறும் இந்தக் குறைதீா் கூட்டத்தில், எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலா்கள், முகவா்கள் பங்கேற்கின்றனா்.

இதில் பொதுமக்கள், நுகா்வோா் நடவடிக்கைக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு உருளை இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.