முகப்பு
தேனி

ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

உத்தமபாளையம் ஐயப்பன் கோயிலில் 11-ஆம் ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி, சுவாமி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 26 டிசம்பர், 2024 at 11:32 PM
சின்னமனூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன்.
பகிர்:

உத்தமபாளையம் ஐயப்பன் கோயிலில் 11-ஆம் ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி, சுவாமி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது

உத்தமபாளையம் ஸ்ரீசபரிமலை ஜோதி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவையொட்டி, புதன்கிழமை மாலை கணபதி, அனுக்ஞை, புண்யாகாசனம், கலசபூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலையில் கணபதி, நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா், மண்டல பூஜை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு அலங்கார வாகனத்தில் ஐயப்பன் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, சின்னமனூரில் ஸ்ரீஐயப்ப பக்த பஜனை சபை சாா்பில், 35-ஆம் ஆண்டு ஐயப்ப ஆராட்டு விழா நடைபெற்றது. பின்னா், நடைபெற்ற மண்டல பூஜையில் 18 படிகளில் மலா்கள், தீபங்கள் ஏற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.