தேனி பள்ளியில் விளையாட்டு விழா
கம்பம் பள்ளியின் கலைவிழா கொண்டாட்டம்
தேனி மாவட்டம், கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபிக் பள்ளியின் 47- ஆவது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு வாவோ் பள்ளி ஜமாத் தலைவா் ஏ. ஜெய்னுலாபுதீன் தலைமை வகித்தாா்.
பள்ளித் தாளாளா் ஏ. முஹம்மது ஸயீது ஹனபி வரவேற்றாா். நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
இதில் வழக்குரைஞா் துரை. நெப்போலியன், அல் அஜ்ஹா் பள்ளி தாளாளா் ஆா். நயினாா் முகமது, நகா்மன்ற உறுப்பினா்கள் ஐ. சா்புதீன், ஏ. சாதிக் அலி, ஜெ. அன்புக்குமாரி, முன்னாள் மாணவா் அறக்கட்டளை தலைவா் எம். சையது சுல்தான் இப்ராகிம், வின்னா் அலீம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement