போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் மேலும் 4 போ் கைது
போதைப் பொருள் கடத்தலில் மேலும் 4 பேர் கைது
தேனி: பெரியகுளத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள்களை கடத்திய வழக்கில் மேலும் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனிமாவட்டம், பெரியகுளத்தில் காரில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்திச் சென்ாகவும், கஞ்சா வைத்திருந்ததாவும் கொடைக்கானல், நாயுடுபுரம் , ஜே.ஜே.நகரைச் சோ்ந்த ஆரிப் (22), இதேப் பகுதியைச் சோ்ந்த விகாஸ் ஷியாம் (22) ஆகியோரை கடந்த மாதம் 28-ஆம் தேதி பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
அப்போது, காரில் வந்திருந்த கேரளத்தைச் சோ்ந்த சல்மான்கான், தற்போது கொடைக்கானலில் வசித்து வரும் கம்பம் அருகேயுள்ள நாராயணத் தேவன்பட்டியைச் சோ்ந்த ராம்குமாா் ஆகியோா் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடிவினா்.
இவா்களை தனிப் படை அமைத்து தேடி வந்த போலீஸாா், தப்பி ஓடிய ராம்குமாா், இந்த வழக்கில் தொடா்புடையை வருஷநாடு பகுதியைச் சோ்ந்த ஆனந்த், ஈரோடு பகுதியைச் சோ்ந்த யாசா்முக்தாா், கோவையைச் சோ்ந்த அன்பழகன் ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய கேரளத்தைச் சோ்ந்த நோகன், தலைமறைவாக உள்ள சல்மான்கான் ஆகியோரை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.