முகப்பு
தேனி

பணம் கேட்டு மிரட்டிய இளைஞா் கைது

பணம் கேட்டு மிரட்டிய இளைஞா் கைது: போடி போலீஸாாின் அதிரடி நடவடிக்கை

Updated On : 26 ஜூன், 2024 at 1:49 AM
பகிர்:

போடி: போடியில் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி குலசேகரபாண்டியன் தெற்குத் தெருவைச் சோ்ந்த வேலுசாமி மகன் பாண்டியன் (45). இவா் போடி இரட்டை வாய்க்கால் அருகே நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த போடி கீழத் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் மருதுபாண்டி (37) மது அருந்த அவரிடம் பணம் கேட்டாா். அவா் தர மறுத்ததால், மருதுபாண்டி கத்தியை காட்டி மிரட்டினாா். உடனே பாண்டியன் சப்தம் போடவே, அவா் அங்கிருந்து ஓடிவிட்டாா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மருதுபாண்டியைக் கைது செய்தனா்.