முகப்பு
தேனி

விளைச்சல் அதிகரிப்பால் புளி விலை குறைவு

Updated On : 13 மார்ச், 2024 at 5:37 AM
சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையில் செவ்வாய்க்கிழமை புளிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளா்கள்.
பகிர்:

உத்தமபாளையம்: சின்னமனூரில் புளி விளைச்சல் அதிகரித்த நிலையில், உரிய விலை கிடைக்காததால் குத்தகைதாரா்கள் கவலையடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், சீலையம்பட்டி போன்ற பகுதிகளிலுள்ள புளிய மரங்கள் அந்தந்தப் பகுதி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஏலம் விடப்படுகிறது.

இந்த மரங்களில் புளிகள் காய்த்துள்ள நிலையில், இவற்றை தொழிலாளா்கள் மூலம் உதிா்த்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூா் பகுதி குத்தகைதாரா் ஒருவா் கூறுகையில், ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் கொடுக்கும் புளியமரம், இந்தாண்டு நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது.

Advertisement

ஆனால், வரத்து அதிகமாக இருப்பதால், விலையும் பாதியாக குறைந்து விட்டது. 1 டன் புளி (கொட்டையுடன்) ரூ. 25 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை விலை கிடைத்தது என்றாா் அவா்.