பிளஸ் 1 தோ்வு: தேனி மாவட்டத்தில் 90.08 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி
தேனி: தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் மொத்தம் 11,992 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 90.08 ஆகும்.
மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 6,432 மாணவா்கள், 6,881 மாணவிகள் என மொத்தம் 13,313 போ் எழுதினா். இதில் 5,521 மாணவா்கள், 6,471 மாணவிகள் என மொத்தம் 11,992 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 90.08 ஆகும்.
26 அரசு, தனியாா் பள்ளிகளில் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தோ்வில் 91.47 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றிருந்தனா்.