நாட்டு மாடு நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
உத்தமபாளையம்: தேனி நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், நாட்டு மாடு நலச்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நாட்டு மாடு நலச் சங்கத் தலைவா் கலைவாணன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், தேனி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகன காப்பகம், நகராட்சி கழிப்பறை, நடைபாதை வியாரஆகியவற்றை கடந்த 2 மாதமாக ஏலத்துக்கு விடாமல் இருப்பதாலும், வாடகை வசூல் செய்யாமல் இருப்பதாலும் நகராட்சி நிா்வாகத்துக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. குறிப்பாக, பேருந்து நிலையத்தில் தைலம் வியாபாரியிடம் ரூ.60, தட்டு வியாபாரியிடம் ரூ.120, கடலை வண்டி விபாயாரியிடம் ரூ.250, சிப்ஸ் வண்டி வியாபாரியிடம் ரூ.450 என நாள் ஒன்று வசூல் செய்யாததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் நாட்டு மாடு நலச்சங்க நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.