முகப்பு
தேனி

சின்னமனூா் பெருமாள் கோயிலில் பாலாலயம்

சின்னமனூரில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:25 PM
சின்னமனூா் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பாலாலயம்.
பகிர்:

சின்னமனூரில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூ தேவிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலா், பணியாளா்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா். விரைவில் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான பணிகள் தொடங்க உள்ளன.