முகப்பு
தேனி

தேனியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்: 23 போ் கைது

தேனியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவைச் சோ்ந்த 23 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:32 PM
தேனியில் பாமக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தேனியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவைச் சோ்ந்த 23 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே பாமக நிறுவனா் ராமதாஸை அவமரியாதையாக பேசியதாக முதல்வா் மு.க.ஸ்டாலினை கண்டித்து பாமக வினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாமக மாநிலப் பொதுச் செயலா் வடிவேல் ராவணன், தேனி வடக்கு மாவட்டச் செயலா் அரசபாண்டி, தெற்கு மாவட்டச் செயலா் முருகன் உள்ளிட்ட 23 பேரை தேனி போலீஸாா் கைது செய்தனா்.