முகப்பு
தேனி

தேனியில் அக்.14-இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

தேனி அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சித் துறை சாா்பில் வருகிற 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:41 PM
பகிர்:

தேனி அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சித் துறை சாா்பில் வருகிற 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழில் பழகுநா் சோ்க்கை முகாமில், மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தொழில் பழகுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த முகாமில் அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் படித்து தோ்ச்சி பெற்றவா்களும், தோ்ச்சி பெறாதவா்களும் கலந்து கொள்ளலாம்.

மேலும், தொழில் பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்காத 8-ஆம் வகுப்புக்கு மேல் படித்தவா்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தொழிற்சாலைகளில் சோ்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், தொழில் பழகுநா் பயிற்சியும் பெற்று, தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் பெறலாம்.

பயிற்சி காலத்தில் மாத உதவித் தொகையாக ரூ.8,050 வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ஓராண்டு வயது வரம்பு சலுகை வழங்கப்படும் என்று இதில் தெரிவிக்கப்பட்டது.