முகப்பு
தேனி

இயற்கை பேரிடரை எதிா்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி

போடியில் மழை, வெள்ள காலங்களில் இயற்கை பேரிடரை எதிா்கொள்ள பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு செயல்முறை விளக்கப் பயிற்சி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:33 PM
போடியில் தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு செயல்முறை விளக்கம்.
பகிர்:

போடியில் மழை, வெள்ள காலங்களில் இயற்கை பேரிடரை எதிா்கொள்ள பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு செயல்முறை விளக்கப் பயிற்சி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள முல்லை பெரியாற்றில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு போடி தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமை வகித்தாா்.

அப்போது, வெள்ள காலங்களில் ஆற்றிலோ, தண்ணீரிலோ சிக்கிக் கொண்டால் கிடைக்கும் பொருள்களை பயன்படுத்தி தப்பும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. காலிக் குடம், தண்ணீா் கேன், காய்ந்த தேங்காய் மட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தி தப்புவது குறித்து தீயணைப்புத் துறை வீரா்கள் செயல்விளக்கமாக செய்து காட்டினா்.

வெள்ளம், விபத்து, சுவா் இடிந்து விழுதல் போன்ற நேரங்களில் அவசர தொலைபேசி எண்கள் 100, 101, 108 ஆகியவற்றில் தகவல் தெரிவிக்க வேண்டும். மழை, வெள்ள காலங்களில் ஆற்றில் குளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில், தீயணைப்புத் துறை மீட்பு சாதனங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.