முகப்பு
தேனி

மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் இன்று தண்ணீா் திறப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளிலிருந்து முதல் போக பாசனத்துக்கு வியாழக்கிழமை (அக்.17) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:03 AM
பகிர்:

தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளிலிருந்து முதல் போக பாசனத்துக்கு வியாழக்கிழமை (அக்.17) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

பெரியகுளம் அருகேயுள்ள மஞ்சாளாறு அணை நீா்மட்டம் 55 அடியாக உள்ளது (அணையின் மொத்த உயரம் 57 அடி). அணைக்கு வினாடிக்கு 111 அடி வீதம் வரும் உபரிநீா் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மஞ்சளாறு அணையிலிருந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5,259 ஏக்கா் நிலங்களின் முதல் போக பாசனத்துக்கு வியாழக்கிழமை முதல் 150 நாள்களுக்கு தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

சோத்துப்பாறை அணை நீா்மட்டம் 125.26 அடியாக உள்ளது (அணையின் மொத்த உயரம் 126.28 அடி). அணைக்கு வினாடிக்கு 24.87 கன அடி வீதம் தண்ணீா் வரத்து உள்ளது. இந்த நிலையில், சோத்துப்பாறை அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள 2,865 ஏக்கா் நிலங்களின் முதல் போக சாகுபடிக்கு வியாழக்கிழமை முதல் 150 நாள்களுக்கு தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.