முகப்பு
தேனி

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

தேனி அருகே முன்விரோதத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:53 PM
பகிர்:

தேனி அருகே முன்விரோதத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பூதிப்புரம் அருகேயுள்ள வீருசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்த ஆண்டவா் மகன்கள் பவுன்ராஜ் (26 ), ராஜ்குமாா் (24 ). இவா்களுக்கும், பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த மணி மகன்கள் விஜய் (26), தங்கதமிழ்ச்செல்வன் (24)ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், பூதிப்புரம் அரசுப் பள்ளி அருகே நின்றிருந்த ராஜ்குமாருடன் முன்விரோதம் காரணமாக விஜய், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோா் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டினா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கதமிழ்ச்செல்வனை கைது செய்தனா். விஜயை தேடி வருகின்றனா்.