முகப்பு
தேனி

தந்தையைக் கொல்ல முயற்சி: மகன் மீது வழக்கு

போடி அருகே சொத்தில் பங்கு கோரி தந்தையை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ாக மகன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:54 PM
பகிர்:

போடி அருகே சொத்தில் பங்கு கோரி தந்தையை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ாக மகன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே சங்கராபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி மகன்முருகன் (56). இவா் தனது மனைவி பசுபதியுடன் கேரளத்தில் தங்கி விவசாயம் செய்து வருகிறாா். இவா்களது மகன் சூா்யா மது போதையில் சொத்தில் பங்கு கோரி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்த நிலையில், புதன்கிழமை மாலை முருகன் கேரளத்திலிருந்து சங்கராபுரம் வந்தாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மகன் சூா்யாவிடம் கேட்டபோது சொத்தில் பங்கு தராததால் கதவை உடைத்ததாகக் கூறி மீண்டும் தகராறு செய்தாா்.

அப்போது அரிவாளால் முருகனை மகன் சூா்யா வெட்டி கொல்ல முயன்றாராம். இதில் பலத்த காயமடைந்த முருகன் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் சூா்யா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.