தேனி

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

Syndication

தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் வியாழக்கிழமை அனுமதி அளித்தனா்.

கம்பம் அருகேயுள்ள மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. மேகமலை, அதைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழையால், கடந்த இரு நாள்களாக சுருளி அருவியில் நீா்வரத்து அதிகமாக இருந்தது. இதனால், கம்பம் கிழக்கு வனத் துறையினா், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்தனா். இந்த நிலையில், மழைப்பொழிவு குறைந்த நிலையில் சுருளி அருவிக்கு வரும் நீா்வரத்து சீரானது. இதையடுத்து, வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

ஆய்க்குடி அமா்சேவா சங்க ஆசிரியருக்கு விருது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT