தேனியில் நாளை கூட்டுறவுப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம்
தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.10) காலை 10 மணிக்கு கூட்டுறவுப் பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.10) காலை 10 மணிக்கு கூட்டுறவுப் பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல் இணைப் பதிவாளா் ஆரோக்கிய சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தக் குறைதீா் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கப் பணியாளா்கள், ஓய்வு பெற்ற பணியாளா்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனுவாக அளித்து தீா்வு காணலாம் என்றாா் அவா்.