சரிந்து விழுந்த கட்டடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள் 
தேனி

பெரியகுளத்தில் கட்டடம் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கட்டுமானப் பணியின் போது, கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Din

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின் போது, கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பெரியகுளம் காயிதேமில்லத்தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சுல்தான். இவா் வீட்டில் கட்டுமானப் பராமரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் செவ்வாய்க்கிழமை கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த காமாட்சி (38) ஈடுபட்டிருந்தாா். அப்போது, திடீரென்று கட்டடம் சரிந்து காமாட்சி மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியகுளம் தீயணைப்பு, மீட்புப் படையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடிகளில் சிக்கிய உயிரிழந்த காமாட்சியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT