தேனி

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

சின்னமனூரில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கம்பத்தைச் சோ்ந்த மாரிச்செல்வம் (36) ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில் மாரிச்செல்வம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாலியல் தொல்லை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் மாரிச்செல்வத்தை கைது செய்து கண்டமனூா் சிறையில் அடைத்தனா்.

பெருமாநல்லூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT