அனுமதியின்றி போராட்டம்: இருவா் கைது
போடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் வெங்கிட்டம்மாள் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவை நகராட்சி சுகாதாரப் பிரிவினா் குப்பைகளை கொட்டி பிரித்து எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தப் பூங்காவை பராமரித்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நூலகம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பினா் நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனா். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் போடி நகா், ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் ஏ.டி.கணேசன், உறுப்பினா் ராஜேஷ் ஆகியோா் கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, போடி-திருமலாபுரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால், போடி நகா் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.