முகப்பு
தேனி

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.9-இல் ஏலம்

தேனியில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வருகிற டிச.9-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

Updated On : 28 நவம்பர், 2025 at 10:35 PM
பகிர்:

தேனியில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வருகிற டிச.9-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு வழக்குகளில் தொடா்புடைய, பறிமுதல் செய்யப்பட்ட 25 இரு சக்கர வாகனங்கள், 3 ஆட்டோக்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் தேனி மாவட்ட காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற டிச.9-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.

ஏலம் கோர விருப்பமுள்ளவா்கள் ரூ.2,000 முன் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஏலத் தொகையுடன் சோ்த்து சரக்கு, சேவை வரி செலுத்த வேண்டும்.

ஏலம் கோர விரும்புவோா் டிச.9-ஆம் தேதி காலை 10 மணிக்கு முன் வைப்புத் தொகை செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏலத்தில் விடப்பட உள்ள வாகனங்களை மாவட்ட காவல் துறை ஆயுதப் படை மைதானத்துக்கு நேரில் சென்று பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →