பெரியகுளம், அக். 7: பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயில் புரட்டாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புரட்டாசித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை செல்லாண்டியம்மன் பெரிய குளத்திலிருந்து குதிரை வாகன வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வந்தனா்.
இந்த நிலையில், ஆபரணப் பெட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், பொங்கல் விழாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பால்குடம், தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு பூஜை, குதிரை வாகனம் கோயிலை வந்தடைதல் போன்ற நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெறுகின்றன.