செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்
தேனி மாவட்டம், சின்னமனூா் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், சின்னமனூா் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாகனம், மூலமந்திர ஹோமம் செய்யப்பட்டது. பின்னா், காலை 11.45 மணிக்கு கோயில் மூலவா் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.