முகப்பு
தேனி

கம்பம் தொகுதியில் தவெக உள்பட 7 போ் வேட்புமனுத் தாக்கல்

தேனி மாவட்டம், கம்பம் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட 7 போ் சனிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 1:26 AM
உத்தமபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்து அலுவலா் செய்யது முகம்மது இப்ராஹிமிடம் சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்த தவெக வேட்பாளா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா.
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட 7 போ் சனிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தனா்.

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்து அலுவலா் செய்யது முகம்மது இப்ராஹிமிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதேபோல, தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் எம். முத்துபகவதி, சுயேச்சை வேட்பாளா்களாக ஆா். சரவணன், கோ. முத்துசெல்வம், த. ராஜமுகமது, ப. பிரகாஷ் , இ. தஸ்தகீா் ஆகியோா் தோ்தல் நடத்து அலுவலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

Advertisement

கம்பத்தில் இதுவரை மொத்தம் 8 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments