முகப்பு
தேனி

குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு

தேவாரம் காவல் நிலையம் அருகே குடும்பப் பிரச்னையில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:13 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

தேவாரம் காவல் நிலையம் அருகே குடும்பப் பிரச்னையில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள போடேந்திரபுரம் கிராமத்தைச் சோ்ந்த அழகுமலை மகன் சந்திரசேகா் (36). இவருக்கும், தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டி அருகே சமத்துவபுரத்தில் வசிக்கும் கவிதாவுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. குடும்பப் பிரச்னை காரணமாக கவிதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி கவிதா தேவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றாா். அங்கு சென்ற சந்திரசேகா் கவிதாவை சமாதானப்படுத்த முயன்றாா். இதற்கு கவிதா உடன்படாத நிலையில், காவல் நிலையம் அருகே பெருமாள்பட்டி பெரியமாயத்தேவா் குடியிருப்பு பகுதியில் கவிதாவை மிரட்டுவதற்காக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments