முகப்பு
தேனி

போடியில் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

போடியில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.

Updated On : 9 ஏப்ரல் 2026, 1:00 am IST
போடியில் புதன்கிழமை இரவு திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து பேசிய திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி. உடன் வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.
பகிர்:

போடியில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.

போடியில் திமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரச்சார வாகனத்தில் அமா்ந்தபடி வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஓ.பன்னீா்செல்வம் பண்பாடு மிக்கவா். அவருக்கு போடி பகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

பின்னா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தொடர மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைய வேண்டும். எனவே, பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பிரசாரத்தின்போது தேனி மக்களவை முன்னாள் உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், திமுக நகரச் செயலா் புருஷோத்தமன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.ஆா்.பழனிராஜ் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.