முகப்பு
தேனி

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

Updated On : 9 ஏப்ரல் 2026, 12:27 am IST
தேனி கருவேல் நாயக்கன்பட்டி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
பகிர்:

தேனி மாவட்டம் கருவேல் நாயக்கன்பட்டி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன வளாகத்தில் கையொப்ப இயக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி, கையொப்ப இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், ரங்கோலி, நடைபயணப் பேரணி, மனிதச் சங்கிலி, தெரு நாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, தேனி கருவேல்நாயக்கன்பட்டி கனரா வங்கி பயிற்சி நிறுவன வளாகத்தில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கையொப்ப இயக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

முன்னதாக முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய செல்ஃபி பாய்ண்ட்-இல் வாக்காளா்கள் சுய படம் எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திரா, முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், தேனி வட்டாட்சியா் சதீஷ்குமாா், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.