போடி நகா் பகுதியில் ஓபிஎஸ் பிரசாரம்
போடி நகா்ப் பகுதியில் திங்கள்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தாா்.
போடி தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் போடி நகா்ப் பகுதியில் பிரசாரம் செய்தாா். திருவள்ளுவா் சிலை, வ.உ.சி. சிலை, காமராஜா் சிலை, தேவா் சிலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியதாவது:
போடி நகரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளஸ். புதை சாக்கடைத் திட்டம், கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவாா்.
Advertisement
அப்போது நகராட்சிப் பகுதியில் தேவையான இடங்களில் கழிவுநீா் வாய்க்கால்கள் கட்டப்படும். தாா்ச் சாலைகள் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், போடி நகர திமுக செயலா் ரா.புருஷோத்தமன், கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.